‘Aishwarya Rajinikanth’: நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘Lal Salaam’. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
முக்கியமாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார்.
கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தைத் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது.
அந்த வகையில், இன்று ‘லால் சலாம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது மகளும் ‘லால் சலாம்’ படத்தின் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்கு வாழ்த்து கூறி பதிவு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ரஜினிகாந்த் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இன்று வெளியான ‘லால் சலாம்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. மேலும், ரஜினி ரசிகர்களும் இந்த படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இயக்குநர் மணிகண்டன் வீட்டில் கைவரிசை.. நகை, பணம் திருட்டு..!