‘படம் வேற லெவல்’ .. மஞ்சும்மல் பாய்ஸை பாராட்டி தள்ளிய ரஜினி..!

0
81

Manjummel Boys: மலையாள இயக்குநர் சிதம்பரம் பொடுவால் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் நடித்து மாபெறும் ஹிட்டாகியுள்ள படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.

இந்த படம் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி ரிலீஸானது. கமல்ஹாசனின் ‘குணா’ படத்தில் இடம்பெற்ற குகையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு தமிழ்நாட்டில் ஹவுஸ் ஃபுல்லாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். மேலும், இந்தப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குநர் சிதம்பரத்தையும் படக்குழுவினரையும் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டினார். தொடர்ந்து நடிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

மக்களிடம் பெரும் ஆதரவையும், பெரும் வசூலையும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் பெற்றுள்ளது. அதன்படி, இந்த படம் ரிலீஸாகி இதுவரை 200 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 220 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் மலையாள படம் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.

முக்கியமாக மலையாள திரையரங்குகளை விட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளிடம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் வெளியானது. அந்த வகையில், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தமிழ்நாட்டில் மட்டும் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டின் பெரிய ஸ்டார்கள் படத்தின் வசூல் கூட ஒரே நாளில் இவ்வளவு வருவது கடினமாக இருக்கும் நிலையில் முழுக்க முழுக்க மலையாளத்தில் வெளியான ஒரு மலையாள படம் தமிழில் சக்கப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினரை நேரில் அழைத்துள்ளார். தொடர்ந்து, படம் வேற லெவலில் இருந்ததாகவும், நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என கூறி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here