ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு புறப்பட்ட ரஜினிகாந்த்!

0
87

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை (ஜனவரி.22) 12.20 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். மேலும் சாதுக்கள், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என 7 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அயோத்திக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்திக்கு ரஜினிகாந்த் செல்கிறார். ரஜினி செல்லும் அதே விமானத்தில் நடிகர் தனுஷும் லக்னோ வழியாக அயோத்திக்குச் செல்லவுள்ளதாக தெரிகிறது.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அயோத்தி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். இதனால், அயோத்தியில் 3 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டு நகரம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராஷ்மிகாவின் ‘டீப் பேக்’ வீடியோ விவகாரம்: குற்றவாளியை கைது செய்த டெல்லி போலீசுக்கு ராஷ்மிகா நன்றி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here