ரஜினியை பார்த்து உற்சாகமடைந்த ரசிகர்கள்..! புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி..!

0
154

‘Rajinikanth’: இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பகத் பாசில், துஷாரா விஜயன், ராணா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கேரளாவிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தமிழ்நாட்டிலும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஆந்திராவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘வேட்டையன்’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத் செல்ல ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் சென்றார். அப்போது ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் கத்த ஆரம்பித்தனர்.

அப்போது தனது ரசிகர்களை பார்த்ததும் நெகிழ்ச்சி அடைந்த ரஜினிகாந்த் அவர்களுடன் சென்று நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது ரசிகர்களை மேலும் உற்சாகமடைந்தனர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here