‘Lal Salaam’: கெஸ்ட் ரோலில் நடித்த ரஜினிக்கு இத்தனை கோடி சம்பளமா?.. வாயைப் பிளந்த ரசிகர்கள்..!

0
147

நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

முக்கியமாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார்.

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தைத் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது.

‘லால் சலாம்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளதால் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், லால் சலாம் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்திற்கு மட்டும் 40 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைக் கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள் கேமியோ ரோலில் நடிப்பதற்கு இத்தனை கோடி சம்பளமா என வாயைப் பிளந்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க மருபுறம் லால் சலாம் படமானது ரஜினி படமாகவே புரமோஷன் செய்யப்பட்டு வருவதால், இந்த படத்திற்கான பிசினஸும் பெரிய அளவில் நடக்கிறது. இதன் காரணமாகவே ரஜினிக்கு பெருந்தொகை சம்பளமாக வழங்கியுள்ளதாக லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here