New Year 2024: ஆண்டு தோறும் நடிகர் ரஜினிகாநந்திற்கு வாழ்த்து கூறுவதற்காக அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு திரண்ட நிலையில் அவர்களுக்கு ரஜினிகாந்த தனது புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை போயஸ் கார்டனில் இன்று காலை 9.30 மணியளவில் ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். மெயின் வாசல் அருகில் வீட்டுக்குள் நின்றபடியே அவர் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
வெள்ளை நிற உடையில் இருந்த ரஜினிகாந்த் தனது இரு கைகளையும் கூப்பி, தனது பாணியில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் தலைவா… தலைவா… என ரசிகர்கள் கூச்சலிட்டனர்.
ரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய ரஜினி கைகளை அசைத்த படியே சில நிமிடங்களில் அங்கிருந்து நகர்ந்து சென்றார். அதன் பிறகு ரசிகர்கள் ரஜினி வீட்டு முன்பு இருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: 2024 புத்தாண்டு: தமிழுகம் முழுவதும் உள்ள கோயில்களில் குவியும் பக்தர்கள்!