‘உங்களைப் போன்றோர்தான் எங்களுக்கு உந்துதலாக இருக்கிறீர்கள்’ – சிவகார்த்திகேயன் குறித்து பேசிய ரஜினி..!

0
181

Rajinikanth about Sivakarthikeyan: இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அயலான் ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வந்தது. தொடர்ந்து அயலான் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது வரை இந்தப் படம் சுமார் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் ரஜினிகாந்த் தன்னை பாராட்டியதாக கூறியிருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், “நீங்கள் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறீர்கள். வித்தியாசமான படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என ரஜினிகாந்த் கூறினார்” என சிவகார்த்திகேயன் பேசினார்.

தொடர்ந்து, சிவகார்த்திகேயன் கூறுகையில், “நீங்கள் நடித்த எந்திரன், 2.0 போன்ற படங்கள்தான் என்னை போன்றோருக்கு உந்துதலாக இருந்தது என்று நான் கூறியபோது, இப்போது உங்களைப் போன்றோர்தான் எங்களுக்கு உந்துதலாக இருக்கிறீர்கள் என்று ரஜினி கூறினார்” என அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: ‘கமலுடன் மோதும் அஜித்’.. ஒரே நேரத்தில் வெளியாகும் இரண்டு படங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here