‘வேட்டையன்’ பட ஷூட்டிங் திடீரென நிறுத்தம்!.. விஜயகாந்தை காண சென்னைக்கு ஓடோடி வந்த ரஜினி!

0
92

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வரும் நிலையில் விஜயகாந்த்தின் இறப்பு செய்தியைக் கேட்டவுடன் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு சென்னைக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஃபகத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படம் நாகர்கோவிலில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று கேப்டன் விஜயகாந்த்தின் இறப்பு செய்தியைக் கேட்ட ரஜினிகாந்த் உடனடியாக ஷுட்டிங்கை நிறுத்திவிட்டு விஜயகாந்த்தைக் காண்பதற்காக சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவு: ‘என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா’.. கதறி அழுத நடிகர் விஷால்!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here