நடிகை ரஜிஷா விஜயனுக்கு விரைவில் திருமணம்..!

0
106

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டான படம் ‘கர்ணன்’. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன். இந்த படத்தைத் தொடர்ந்து அவர் ‘ஜெய்பீம்’, ‘சர்தார்’ போன்ற படங்களில் நடித்தார்.

கேரளாவை சேர்ந்த ரஜிஷா விஜயன் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து முன்னணி கதாநாயகியாக தற்போது வலம் வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ரஜிஷா விஜயன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜிஷா விஜயன், மலையாளத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை காதலித்து வருகிறாராம்.

இந்த விஷயத்தை வெளியில் கசியவிடாமல் இருவரும் இருந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

ரஜிஷா விஜயனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த டோபின் தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘1461 நாட்கள். இன்னும் ஒரு பயணம் செல்ல காத்துக் கொண்டிருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவால் தங்களது காதல் திருமணம் நடைபெறவுள்ளதாக சூசகமாக கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களது காதலுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here