‘என்னை மன்னித்து விடுங்கள் அப்பா’ – கணவரை பிரிந்து கண்ணீர் மல்க பேசிய ராஜ்கிரண் மகள்!

0
100

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயணிப்பவர் ராஜ்கிரண். இவரது வளர்ப்பு மகள் பிரியா என்கிற ஜீனத்பிரியா. சின்னத்திரை மற்றும் சினிமா நடிகரான முனீஸ்ராஜாவை காதலித்து, 2022ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

ராஜ்கிரண் எதிர்ப்பை மீறி பிரியா திருமணம் செய்துகொண்டார். இதுதொடர்பாக பிரியா – முனீஸ்ராஜா தம்பதியர் மற்றும் ராஜ்கிரண் இடையே பல்வேறு சர்ச்சைகள் போலீஸ் நிலையம், நீதிமன்றம் என அலைந்தனர்.

ஒருகட்டத்தில் கடுப்பான ராஜ்கிரண் ‘பிரியா என் மகளே இல்லை’ என கூறிவிட்டார். இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக பிரியாவும் – முனீஸ்ராஜும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பிரிந்துவிட்டனர்.

இதுதொடர்பாக பிரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘2022ஆம் ஆண்டு நானும், முனீஸ்ராஜாவும் திருமணம் செய்துகொண்டோம். இப்போது நாங்கள் பிரிந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை.

என்னை வளர்த்த அப்பாவை மிகவும் காயப்படுத்தி விட்டேன். ஆனால் எனக்கு பிரச்சினை வந்தபோது என்னை காப்பாற்றியது அவர் தான். இது நான் எதிர்பார்க்காத கருணை. அவரிடம் எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் பத்தாது.

என்னை மன்னித்து விடுங்கள் அப்பா’ என கண்ணீர் மல்க பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here