Rakul Preet Singh: ‘ரகுல் ப்ரீத் சிங்’ திருமண தேதி எப்போது தெரியுமா?..

0
48

தமிழ் சினிமாவில் திரைக்கு வரவுள்ள ‘அயலான்’, ‘இந்தியன் 2’ போன்ற படங்களில் நடித்திருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ரகுல் பிரீத் சிங், பிரபலமான நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜாக்கி பக்நாணியை காதலித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் அவர்களது உறவினை பற்றி கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர்களது சமூக வலைத்தளப் பக்கத்தின் மூலமாக அறிவித்திருந்தார்கள். அதன்படி இருவரும் திருமணம் எப்போது என ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்த நிலையில் தற்போது அவர்களது திருமண தேதி வெளியாகியுள்ளது.

வரும் பிப்ரவரி 22ஆம் தேதி கோவாவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அனைத்தையும் ப்ரைவேட்டாகவே நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோவாவில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘லவ் இருக்கா?.. இல்லையா?..’ – சித்தார்த் பதிவிற்கு ரசிகர்கள் கமெண்ட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here