நடிகை ரகுல் பிரீத் சிங்கின் திருமணம் உறுதி?..

0
111

Rakul Preet Singh: தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக்கிற்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தொடர்ந்து, ‘என்.ஜி.கே’ , ‘என்னமோ ஏதோ’, ‘தேவ்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்த அவர் ஹிந்தி படங்களிலும் தடம் பதித்து உள்ளார். இவர், ஜாக்கி பாக்னானி என்பவரை காதலித்து வருகிறார்.

ரகுல் பிரீத் மற்றும் ஜாக்கி பாக்னானி இருவரும் 2020ஆம் ஆண்டு முதல் காதல் ஜோடிகளாக உலா வருகின்றனர். பல இடங்களுக்கும் ஒன்றாக சென்று வந்தனர்.

அதன்பின் தங்களுக்கு இடையேயான இனிமையான தருணங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்தது. இந்த நிலையில், இவர்களுக்கு வருகிற 21ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. கோவாவில் பீச் ஓரத்தில் உள்ள பகுதியில் இந்த ஜோடியின் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here