‘கேம் சேஞ்சர்’ ரிலீஸ் ஆவதில் சிக்கல்.. ஷங்கரை வச்சு செய்யும் ராம் சரண் ரசிகர்கள்..!

0
91

Game Changer: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஷங்கர், நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு, ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது பவன் கல்யாண் நடித்து வரும் ‘ஓஜி’ படமும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ‘கேம் சேஞ்சர்’ படம் ரிலீஸாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

மேலும், தசரா சமயத்தில்தான் ‘கேம் சேஞ்சர்’ படம் வெளியாகும் எனவும் தகவல் பரவி வருகிறது. படம் தள்ளிப் போகும் தகவலைக் கேட்டு ராம் சரணின் ரசிகர்கள் பெரும் அப்செட்டில் உள்ளனர். மேலும், இயக்குநர் ஷங்கரை கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here