ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்துடன் சென்ற ராம் சரண்..!

0
95

Ram Charan: தெலுங்கு திரைப்பட மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண், 2007ஆம் ஆண்டு வெளியான ‘சிறுத்தை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

அவரது இந்த நடிப்பின் மூலம் அவருக்கு பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகள் கிடைத்தன. தற்போது இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார்.

நாளை ராம் சரணின் பிறந்த நாள் என்பதால் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ‘RC 16’ படத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் சுகுமார் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார். மேலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ராம் சரண் தனது குடும்பத்துடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சாமி தரிசன செய்திருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here