நாளை வெளியாகும் ‘ரணம்’ படத்தின் புதிய பாடல்..!

0
176

தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சரோஜா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் வைபவ். தொடர்ந்து அவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஷெரிஃப் இயக்கத்தில் ‘ரணம் அறம் தவறேல்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை மிதுன் மித்ரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும், இந்த படத்திற்கு அரோல் கொரெல்லி இசையமைக்கிறார். இந்த படத்தில் வைபவுடன் இணைந்து தான்யா ஹோப் மற்றும் நந்திதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் ஈர்த்தது.

அதனைத் தொடர்ந்து ‘ரணம்’ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த டீசரின் மூலம் இந்தப் படம் ஒரு கிரைம் திரில்லர் கதைகளத்தில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ரணம்’ படத்தின் மூன்றாவது பாடலான ‘பொல்லாத குருவி’ என்ற பாடல் நாளை மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. சமீபத்தில் ‘ரணம்’ படம் வரும் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here