‘இது ஒரு ஆரோக்கியமான உரையாடல் தான்’ – அனிமல் பட விமர்சனத்திற்கு விளக்கமளித்த ரன்பீர் கபூர்!

0
88

‘Animal’: இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்த படம் அனிமல். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியாது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இந்த நிலையிலும் இந்த படம் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதற்கிடையே இந்த படம் கடந்த 26ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடி வெளியீட்டிற்கு பிறகு இந்த படம் பல்வேறு விமர்சனங்களில் சிக்கி இருக்கிறது. மேலும், இந்த படத்தை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அனிமல் பட விமர்சனங்களுக்கு நடிகர் ரன்பீர் கபூர் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், “சமூகத்தில் உருவாகும் கொடிய ஆணாதிக்கம் குறித்து ஒரு ஆரோக்கியமான கருத்துரையாடல் தற்போது தொடங்கியுள்ளது.

இது உண்மையிலேயே நல்லவிதமான விமர்சனங்கள் தான். ஒருபடம் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு விஷயத்தை பேசுவதற்கு தொடங்கி வைக்க வேண்டும்.

தவறு நடந்தால், அதை தவறு என்று சுட்டிக் காட்டி சமூகத்தில் கருத்துகள் பேசத் தொடங்காத வரை அதனை நாம் உணரவே முடியாது. அந்த தவறைத்தான் படத்தில் நாங்கள் காட்டியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here