அப்படி போடு பாடலுக்கு.. குத்தாட்டம் போட்ட ரன்வீர் சிங்.. வைரலாகும் வீடியோ..

0
71

Ranveer Singh: இந்திய சினிமாவின் பிரம்மாண்டம் என அழைக்கப்படுபவர் இயக்குநர் சங்கர். இவர் தற்போது ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் மற்றும் கமலை வைத்து இந்தியன் 2.3 படங்களை எடுத்து முடித்திருக்கிறார்.

தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்க தயாராக இருக்கிறார். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே புதுச்சேரியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரருடன் திருமணம் நடைபெற்றது.

பல்வேறு காரணங்களால் அவர்கள் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஐஸ்வர்யாவுக்கும், சங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திக் என்பவருக்கும் இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது.

சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன. இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 15) சங்கர் மகளில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது, திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரன்வீர் சிங், அதிதி சங்கருடன் சேர்ந்து ‘அப்படி போடு’ பாடலுக்கு மேடையில் குத்தாட்டம் போடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here