Rashmika Deep Fake Video: ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் சினிமா நடிகைகளின் டீப் பேக் வீடியோக்கள் அதிகமாக வெளியாகி பரவி வருகிறது.
சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், ஆலியா பட், கஜோல், பிக்பாஸ் அபிராமி ஆகியோரின் போலியான ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
முன்னதாக வெளியான ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்த ராஷ்மிகா, குற்றவாளியை கைது செய்யக்கோரி புகார் அளித்திருந்தனர்.
அதன்பேரில், ராஷ்மிகா டீப் பேக் வீடியோவை வெளியிட்ட இளைஞரை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, பல நடிகைகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்களின் டீப் பேக் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், மீண்டும் ராஷ்மிகாவின் ஆபாச டீப் பேக் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆபாசமாக நடனம் ஆடும் பெண்ணின் முகத்தில் ராஷ்மிகா முகத்தை வைத்து எடிட் செய்துள்ளனர்.
இந்த டீப் பேக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, ராஷ்மிகாவும் இந்த செயலை கண்டித்துள்ளார்.
சினிமா நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என அனைவரது புகைப்படங்களையும் டீப் பேக் மூலம் எடிட் செய்து ஆபாசமாக வீடியோ வெளியிடப்பட்டு வருகிறது.
முன்னதாக இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இந்த டீப் பேக் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.