அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்த ராஷ்மிகா..! படக்குழு நெகிழ்சி..!

0
149

Rashmika Mandanna: இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துவருபவர் நடிகை ராஷ்மிகா. இவர் தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷுடன் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படங்களைத் தொடர்ந்து, அவர் தெலுங்கு இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கும் ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் டீசரை இயக்குநர் உருவாக்கி வருகிறார்.

இந்த டீசர் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்காக நடிகை ராஷ்மிகா ஐந்து மொழிகளிலும் டப்பிங் பேசியுள்ளார். மேலும், இந்த டீசர் ராஷ்மிகாவின் பிறந்தநாளான ஏப்ரல் 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் ஒரு வித்தியாசமான காதல் கதையாக உருவாகி வருவதாகவும் இந்த படத்தில் ஹீரோ மற்ற நடிகர்கள் குறித்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here