‘என்னது.. நான் சௌந்தர்யாவை போல இருக்கேனா?..’ – ராஷ்மிகா மந்தனா!

0
130

கன்னட நடிகையான சவுந்தர்யா 1992ஆம் ஆண்டு ‘பா நானா பிரீதீசு’ என்ற கன்னட படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். இவர், 1993ஆம் ஆண்டு வெளியான ‘பொன்னுமணி’ என்ற படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’, கமலுடன் ‘காதலா காதலா’, விஜயகாந்துடன் ‘தவசி’, ‘சொக்கத்தங்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் சவுந்தர்யா நடித்திருக்கிறார். இவர் 2004ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், தற்போது இவரது வாழ்க்கையை படமாக்கும் ஏற்பாடுகள் கன்னட திரையுலகில் நடந்து வருகிறது. இதனை அறிந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, சவுந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “நடிகை சவுந்தர்யாவின் பயோபிக் படத்தில் நடிக்க விருப்பம் இருக்கிறது. சிறுவயதிலிருந்தே என்னுடைய அப்பா நான் சௌந்தர்யாவை போல இருப்பதாக சொல்வார்.

அது எனக்கு பெருமையாக இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சவுந்தர்யாவின் பயோபிக் படத்தில் நடிப்பேன்” எனக் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ராமர் கோவில் திறப்பு விழாவில் ரஜினி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here