‘டீப் பேக் வீடியோ குறித்து விழிப்புணர்வு வேண்டும்’ – ராஷ்மிகா மந்தனா!

0
106

Rashmika Mandanna: ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் சினிமா நடிகைகளின் டீப் பேக் வீடியோக்கள் அதிகமாக வெளியாகி பரவி வருகிறது.

சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், ஆலியா பட், கஜோல், பிக்பாஸ் அபிராமி ஆகியோரின் போலியான ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில், இது குறித்து ராஷ்மிகா மந்தனா ஒரு பேட்டியில் கூறுகையில், “டீப் பேக் வீடியோக்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதுகுறித்து பேசினால் விரும்பித்தானே இந்த வேலைக்கு வந்தீர்கள் என்கிறார்கள். நடிகையாக இல்லாமல் இதுவே ஒரு பெண் எதிர்கொள்கிறார் என்றால் என்ன நடக்கும்.

உண்மையில் அந்த பெண்களை நினைத்து பயம் வருகிறது. ஒருவேளை அதுகுறித்து நான் பேசினால் டீப் பேக் என்றால் என்ன?, அது சரியானதா, என குறைந்தபட்சம் மக்களையாவது சென்றடையும். அதுகுறித்து விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது அவசியம்” என்கிறார்.

இதையும் படிங்க: ‘நம்மிடம் எல்லை மீறத்தான் செய்வார்கள்’ – அட்ஜெஸ்மெண்ட் குறித்து பேசிய ஓவியா..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here