விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா காதல் உண்மையா?.. – மனம் திறந்த ராஷ்மிகா..!

0
111

இந்திய திரையுலகில் முன்னனி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தானா. இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ராஷ்மிகாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக கூறப்பட்டது.

மேலும், இருவரும் ஒருவர் வீட்டில் ஒருவர் அடிக்கடி விருந்து சாப்பிடுவதாகவும் பேசப்படுகிறது. சமீபத்தில் இருவரும் வெளிநாட்டு கடற்கரையில் சுற்றித் திரிந்ததாகவும் தகவல் வெளியாகியது. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ என்ற திரைப்படம் நடித்தினர்.

இந்த படம் இளம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இப்படத்தில் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தைத் தொடர்ந்து இருவரும் காதலிக்க ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், இருவக்கும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியானது. விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியானது. இந்த தகவல் பொய்யானது என நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா குறித்து நடிகை ராஷ்மிகா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது. “நானும் விஜய்யும் ஒன்றாகதான் வளர்ந்தோம். என்னுடைய வாழ்க்கையில் எது நடந்தாலும் விஜய்யிடம் ஆலோசனை கேட்டுதான் செய்வேன்.

நான் என்ன சொன்னாலும் அதற்கு ஆமாம் போடுபவர் கிடையாது விஜய். நல்லது, கெட்டதை அறிந்து சொல்லக்கூடியவர். என் வாழ்வில் எல்லாரையும் விட எனக்கு ஆதரவாக அவர் இருக்கிறார். என் வாழ்க்கையில் அவர் ரொம்ப முக்கியம்.

உண்மையில் நான் மதிக்கும் ஒரு நபராக விஜய் தேவரகொண்டா இருக்கிறார்” என தெரிவித்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த பேச்சு இவர்களுக்குள் காதல் இருப்பதை உறுதிபடுத்தியிருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

இதையும் படிங்க: மிஷ்கின் இசையில் மீண்டும் ஒரு பாடல்..! வைரலாகும் ‘COME AND KISS ME’ வீடியோ..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here