‘யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை’ – அனிமல் பட விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ராஷ்மிகா..

0
143

Rashmika Mandanna: இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் இருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் சமீபத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து ‘அனிமல்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்தன் மூலம் ராஷ்மிகா மீது சர்ச்சை கிளம்பியது.

இந்த நிலையில் விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராஷ்மிகா கூறுகையில், “பெண்களை சிலர் உருவக்கேலி செய்கின்றனர். அவர்களை எல்லாம் நான் கண்டுகொள்வது கிடையாது. ரன்பீர் கபூருடன் நடித்த ‘அனிமல்’ படம் வெற்றிப் பெற்றது.

ஆனால், அந்த படத்திற்கு அதிகளவில் விமர்சனம் வந்தது. எனது கதாபாத்திரம் குறித்தும் அவதூறாக பேசினர். எனது முகம் நன்றாக இல்லை, நடிப்பும் சரியில்லை என விமர்சனம் செய்து, கேலி செய்தனர். பெண்கள் உடலை வைத்து உருவக்கேலி செய்பவர்களைப் பார்த்தாலே எனக்கு அருவருப்பாக உள்ளது.

அந்த படத்தில் நான் நடித்த காட்சிகளுக்கு படப்பிடிப்புத் தளத்திலேயே என்னைப் பாராட்டி கைதட்டினர். அந்த காட்சியைத் தான் தற்போது அனைவரும் விமர்சனம் செய்கின்றனர். எனது நடிப்பு எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது, எனது நடிப்பு குறித்து எனக்குத் தெரியும். விமர்சனம் செய்பவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here