Rathnam Movie Release Date: இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்னம்’. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். இது விஷாலின் 34 ஆவது படமாகும். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விவேகா பாடல்களை எழுதுகிறார். இதன் படப்பிடிப்புகள் பல்வேறு மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகள் நிறைவு பெற்றது.
அதன்படி ‘ரத்னம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து நடிகர் விஷால் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, ‘ரத்னம்’ படம் வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் மே மாதம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: ‘அயலான்’ வசூல் எத்தனை கோடி தெரியுமா?.. படக்குழு அறிவிப்பு..!