‘எதனால’.. ரத்னம் படத்தின் செகண்ட் சிங்கிள்..!

0
117

‘Rathnam’ : இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்னம்’. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். இது விஷாலின் 34ஆவது படமாகும். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விவேகா பாடல்களை எழுதுகிறார். இதன் படப்பிடிப்புகள் பல்வேறு மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

‘ரத்னம்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘Don’t Worry Da Machi’ பாடல் மார்ச்.09 வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அவரே பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த பாடலுக்கு விவேகா வரிகள் எழுதியிருக்கிறார்.

ஹை பீட்டில், டப்பாங்குத்து டான்ஸ் ஆடும் வகையில் மாஸாக வெளியான இந்த ‘Don’t Worry Da Machi’ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது ‘ரத்னம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘எதனால’ என்ற பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ‘ரத்னம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘எதனால’ என்ற பாடல் வருகிற மார்ச் 29ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, இந்த ‘ரத்னம்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here