நடிகர் கார்த்தியுடன் இணைந்த இயக்குநர் ரத்னகுமார்..!

0
75

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் சேர்ந்து ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற படங்களில் அசோசியேட் இயக்குநராகவும், திரைக்கதை உதவியாளராகவும் இருந்தவர் ரத்னகுமார்.

இவர், ‘மேயாத மான்’ படத்தை இயக்கிய தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர். தொடர்ந்து, ‘ஆடை’, ‘குளு குளு’ ஆகிய படங்கள் இயக்கிய நிலையில் அந்த படங்கள் சரிவர ரசிகர்களிடம் சென்றடையவில்லை.

அதன் பிறகு ரத்னகுமார் எந்த ஒரு படத்தையும் அவர் இயக்கவில்லை. இந்த நிலையில், தற்போது அவர் கார்த்தியுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகவுள்ள ‘சர்தார் 2’ படத்தில் ரத்னகுமார், வசனம் மற்றும் திரைக்கதை உதவியாளராக பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here