அவங்களுக்கு இது ஈஸியாக கிடைக்கிறது.. ஹீரோக்கள் குறித்து பேசிய ரவீனா தாண்டன்..

0
55

Raveena Tandon: பாலிவுட் நடிகையாக இருப்பவர் ரனீனா தாண்டன். இவர் தமிழில் ‘சாது’, ‘ஆளவந்தான்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவர், சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமாவில் கதாநாயகிகளை விட கதாநாயகர்களுக்கே பல மடங்கு சம்பளம் அதிகமாக கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “நான் கதாநாயகியாக நடித்த காலத்தில் கதாநாயகன், நாயகிகளுக்கு வழங்கும் சம்பளத்தில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் நிறைய பாகுபாடுகள் காட்டினர். ஹீரோ ஒரு படத்தில் சம்பாதித்ததை நாங்கள் 15 படங்களில் நடித்தால் தான் சம்பாதிக்க முடியும்.

கதாநாயகர்கள் அனைவரையும் பற்றி நான் சொல்லவில்லை. ஆனாலும் பல நடிகர்கள் அதிமாகவே சம்பளம் பெறுகின்றனர். நடிகைகள் வந்த படங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு நடித்தனர். சினிமா வாழ்கையில் ஒரு திட்டமிடல் இல்லாமல் இருந்தது.

ஆனால் இப்போது நடிகைகள் மிகவும் திட்டமிட்டு முன்னோக்கிச் செல்கின்றனர். கதைகள் தேர்வில் மட்டுமன்றி சம்பள விஷயத்திலும் எச்சரிக்கையோடு இருக்கிறார்கள்” என்றார். தற்போது ரவீனா தாண்டன் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here