‘RC 16’ : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் தற்போது ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ‘RC 16’ படத்தில் நடிக்கிறார்.
இயக்குநர் சுகுமார் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார். மேலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர்கள் மட்டுமின்றி தமிழ், கர்நாடகா மாநில நடிகர்களும் நட்டிக்கின்றனர். அவர்களின் கதாபாத்திரங்கள் பேசக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘RC 16’ படத்திற்கு நான்கு தலைப்புகள் கையில் இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தலைப்புகளில் ‘Peddi’ என்ற ஒரு தலைப்பும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இந்த டைட்டில் உறுதிசெய்யப்படவில்லை. கூடிய விரைவில் ‘RC 16’ படத்தின் டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.