உதயகுமார் வாத்தியாராக கருணாஸ்..! ‘ரெபெல்’ பட கதாபாத்திரம் அறிமுகம்..!

0
103

REBEL Character Intro: இயக்குநர் நிக்கேஷ் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் திரைப்படம் ‘ரெபெல்’. இந்த படத்தில் மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். மேலும், படத்திற்கு அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த டிரைலரை நடிகர் தனுஷ் வெளியிட்டார். தமிழ்நாடு மாணவருக்கும் கேரள இளைஞர்களுக்கும் நடுவே நடக்கும் பிரச்சினை தான் இந்த படத்தின் கதையாக தெரிகிறது.

மேலும், இது ஒரு உண்மை சம்பவமான கதை என கூறப்படுகிறது. தற்போது இந்த டிரைலர் மக்களிடம் கவனம் பெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது ‘ரெபெல்’ படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளது.

அதன்படி, முதலாவதாக நடிகர் கருணாஸின் புகைப்படம் வெளியானது. இந்த படத்தில் கருணாஸ் உதயகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பார்ப்பதற்கு பள்ளி வாத்தியார் போல இருப்பதால் இந்த படத்தில் இவர் வாத்தியாராக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, படத்தின் காதாபாத்திரங்கள் அறிமுகம் செய்ய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ரெபெல் படம் வருகிற மார்ச் 22ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here