மலையாள வாசனையுடன் வெளியான ‘சக்கர முத்தே’ பாடல்..!

0
112

‘Rebel’: இயக்குநர் நிக்கேஷ் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் திரைப்படம் ‘ரெபெல்’. இந்த படத்தில் மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். மேலும், படத்திற்கு அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தமிழ்நாடு மாணவருக்கும் கேரள இளைஞர்களுக்கும் நடுவே நடக்கும் பிரச்சினை தான் இந்த படத்தின் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ‘ரெபெல்’ படத்தின் ‘அழகான சதிகாரி’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடல் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘ரெபெல்’ படத்தின் ‘சக்கர முத்தே’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தொடர்ந்து இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here