‘Rebel’: இயக்குநர் நிக்கேஷ் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் திரைப்படம் ‘ரெபெல்’. இந்த படத்தில் மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.
இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். மேலும், படத்திற்கு அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து. இந்த நிலையில், தற்போது படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, படத்தின் செகண்ட் சிங்கிள் ‘Rice of Rebel’ என்ற பாடல் பிப்ரவரி 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. ‘ரெபெல்’ திரைப்படம் வருகிற மார்ச் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.