Rebel: இயக்குநர் நிக்கேஷ் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் திரைப்படம் ‘ரெபெல்’. இந்த படத்தில் மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.
இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். மேலும், படத்திற்கு அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், தற்போது படத்தின் டிரைலர் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘ரெபெல்’ படத்தின் டிரைலர் வருகிற மார்ச் 11ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில், ‘ரெபெல்’ படத்தின் டிரைலர் மார்ச் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.