‘Record Break’: இயக்குநர் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் இயக்கத்தில் நடிகை ஜெயசுதா மகன் நிஹார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெக்கார்ட் பிரேக்’. இந்த படத்தை ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் தயாரிக்கிறது.
மேலும், இந்த படத்தில் நாகர்ஜூனா, ராக்தா இப்திகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘ரெக்கார்ட் பிரேக்’ படம் வருகிற மார்ச் 8ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 8 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் 8 மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸாகியுள்ளது. தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து, “ஆன்மீகம் மற்றும் பெண்களுக்குத் தேவையான கருத்துகள் இந்த படத்தில் இருக்கிறது. மேலும், அம்மா செண்டிமெண்ட், விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து இந்த படத்தில் பேசப்பட்டுள்ளது.
ரெஸ்லிங்கில் எப்படி ஹீரோ போட்டிப் போட்டு எதிர்நாடான சீனா, பாகிஸ்தானை ஜெயிக்கிறான் என்பதுதான் இந்த ‘ரெக்கார்ட் பிரேக்’ படத்தின் கதை” என படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.