குடியரசு தின விழா: தமிழ்நாடு ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு..

0
72

குடியரசு தின விழா நாளை (ஜனவரி 26) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கான விழா மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை எதிரே நடைபெற உள்ளது. விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த இருக்கின்றனர்.

குடியரசு தின விழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஆயிரத்து 250 ரயில்வே காவல் துறையினர், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் காவல் துறையினர், மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாக பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர். மேலும், ஓடும் ரயில்களிலும் காவல் துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ரயில் நிலையங்களில் சந்தேகப்படும்படி யாரேனும் இருந்தால், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு எண் 1512 அல்லது 9962500500 என்ற எண்ணிக்கு தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here