‘Rise of Miller’.. வெளியானது ‘கேப்டன் மில்லர்’ புதிய பாடல்..!

0
173

‘Captain Miller’: இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சிவராஜ் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கைன், அதிதி பாலன், நிவேதிதா சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மேலும், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தொடர்ந்து ‘கேப்டன் மில்லர்’ படத்தின் அப்டேட்டுகள் வெளிவந்து ரசிகர்களிடம் ஹைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தின் புதிய பாடலான ‘Rise of Miller’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் வெளியாகி சில மணி நேரங்களிலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

‘கேப்டன் மில்லர்’ படம் நாளை (ஜன.12) திரைக்கு வரவுள்ளது. மேலும், இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ‘ஜெயம் ரவி’ படம்?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here