‘Thalapathy 69’: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் தொடர்பான தகவலும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
தெலுங்கில் இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் வெளிவந்த ‘RRR’ படத்தைத் தயாரித்தவர் டிவிவி தனய்யா, தற்போது விஜய்யின் 69ஆவது படத்தைத் தயாரிக்க இருக்கிறது.
ஆனால், இந்த படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், தற்போது ஒரு புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, தளபதி 69ஆவது படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆர்.ஜே.பாலாஜி தனது Spotify-ல் ‘ஒரு மிகப்பெரிய ப்ராஜெக்ட் குறித்து பேச்சுவார்த்தை உள்ளது’ என பேசியிருக்கிறார்.
இதனால், தளபதியை வைத்து அவரது 69ஆவது படத்தை இயக்க ஆர்.ஜே.பாலாஜிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.