Robert: இயக்குநர் டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘நெவர் எஸ்கேப்’. இந்த படத்தை ராயல் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் நான்சி ஃப்ளோரா தயாரிக்கிறார். புதுமுக நட்சத்திரங்கள் நடிப்பில், அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகி இருக்கிறது.
பல ஹாலிவுட் படங்கள் தரும், இதயம் அதிர வைக்கும் அதிரடியான ஹாரர் கலந்த திரில்லர் அனுபவத்தைத் தரும் வகையில் நெவர் எஸ்கேப் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆதி பிருத்வி, ஹர்ஷினி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும், நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் முதன்முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இவர்களுடன் கவி ஜெ சுந்தரம், உவைஸ் கான், ராஜி, அகிலா சுந்தர், ஜெபின் ஜான், பிரணேஷ்வர், சஷ்டி பிரணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சந்தோஷ் குமார் எஸ்.ஜே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.