‘ChellaKili’: இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் ‘ரோமியோ’. இந்த திரைப்படத்தில் விஷாலின், மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை விஜய் ஆண்டனி வழங்கும் குட் டெவில் புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்தப் படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், ‘ரோமியோ’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘ரோமியோ’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை விஜய் ஆண்டனி தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘ரோமியோ’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘செல்லக்கிளி’ என்ற பாடல் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகவுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். மேலும், இது குறித்து ஒரு ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.