‘தனுஷ் இயக்கும் படத்தில் நடிக்க ஆட்கள் தேவை?’ – இது வதந்தியா?.. உண்மையா?.. தனுஷின் மேலாளர் விளக்கம்..!

0
136

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் தனுஷ், தற்போது தனது 50ஆவது படத்தை தானே இயக்கி, நடித்து வருகிறார். தொடர்ந்து, சேகர் கம்முலா இயக்கும் தனது 51ஆவது படத்திலும் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து, தனது மூன்றாவது இயக்கமாக ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் இன்றைய இளைஞர்களின் காதலை மையமாக வைத்து உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று திடீரென சமூக வலைதளத்தில் ஒரு வதந்தி பரவத்தொடங்கியது. நடிகர் தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்காக ஆடிசன் நடைபெற உள்ளதாக செய்தி பரவியது.

இதனையறிந்த தனுஷின் மேலாளர், இது குறித்து தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “சமூக வலைதளப் பக்கங்களில் தனுஷின் புதிய படத்தில் நடிப்பதற்காக நடிகர், நடிகைகள் தேவைப்படுகிறது.

இதற்கு தொடர்பு கொள்ள எனது பெயர், மொபைல் நம்பர் கொடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியது உண்மை அல்ல, அது முற்றிலும் பொய். இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here