திடீரென கேட்ட அமானுஷ்ய சத்தம்.. திகிலூட்டும் ‘சப்தம்’ படத்தின் டீசர்..!

0
131

Sabdham: அறிவழகன் நகுல் நடிப்பில் வெளிவந்த வல்லினம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த பார்டர், குற்றம் 23 திரைப்படத்தை இயக்கினார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஈரம்’ படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்த படம் ‘ஈரம்’. இந்த படம் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அறிவழகன், வல்லினம், பார்டர், குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இந்நிலையில், தற்போது ஆதியை வைத்து மீண்டும் அறிவழகன் இயக்கும் படம் தான் ‘சப்தம்’. ஹாரர் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் லக்ஷ்மி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 12) இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தில் ஆதி ஒரு மருத்துவக் கல்லூரி ஆசிரியர் போல் தெரிகிறார்.

அந்த கல்லூரியில் ஒரு அமானுஷ்ய சத்தம் கேட்கிறது, அந்த சத்தத்தை வைத்து தான் படத்தின் கதை திகிலாக நகர்கிறது. இந்த ‘சப்தம்’ திரைப்படம் இந்த கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here