Sakshi Agarwal: தமிழ் ரசிகர்களிடம் பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்து சென்றவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர், தற்போது வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். இருந்தபோதிலும் இவருக்கு பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை.
தொடர்ந்து, அவரது சமூக வலைத்தளப் பக்கங்களில் படவாய்ப்பிற்காக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இருந்தபோதிலும் எந்த விதமான முன்னேற்றமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டி ஒன்று கொடுத்தார்.
அந்த பேட்டியில் அவர் பேசியதாவது, “ராஜா ராணி படத்தில் ஆர்யா ஹீரோ, அட்லி இயக்குநர். இந்த படத்தில் இரண்டாவது ஹீரோயின் நான் தான் என நடிப்பதற்கு அழைப்பு வந்தது.
தயாரிப்பு பற்றி அப்போது எனக்கு தெரியாது. நான் இரண்டு நாட்கள் நடித்தேன். அதன்பிறகு அழைப்பதாக கூறினார்கள். ஆனால், படத்தின் ஷூட்டிங் முடிந்து படமே ரிலீஸாகிவிட்டது.
அதுவரை நான் நடிப்பதற்காக காத்திருந்தேன். அந்த படம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. என்ன தவறு நடந்தது என தெரியவில்லை. அது குறித்து பேச விரும்பவில்லை” என கூறியிருக்கிறார்.