‘Salaar’ – சலார் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?.. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்!

0
152

Salaar Box office : ‘சலார்’ திரைப்படம் ரிலீஸ் ஆகிய இரண்டு நாள்களில் பல கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், இத்தனை கோடி வசூல் செய்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கேஜிஎப் திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கேஜிஎஃப் படத்துக்கு இசையமைத்து ரசிகர்களைப் பெற்ற ரவி பர்சூர் தான் சலார் படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்துள்ளார். நடிகை சுருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று முன் தினம் (டிச.22) இப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு தெலுங்கு, கன்னட ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தாலும் மறுபக்கம் அதற்கு சரிசமமாக விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இருந்தபோதிலும் சலார் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது. அதன்படி சலார் திரைப்படம் இரண்டு நாள்களில் ரூ.295.7 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இரண்டாம் நாள் மட்டும் ரூ.117 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கலவையான விமர்சனங்கள் தாண்டி, 2 நாள்களில் 300 கோடிகளை நெருங்கியுள்ள சலார் படத்தின் வசூல் ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், கிறிஸ்துமஸ் விடுமுறை நாள்கள் என்பதால் படத்தின் வசூல் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, இப்படத்தின் வசூல் அதிகரித்தால் குறுகிய காலத்தில் ரூ.500 கோடி வசூல் செய்த படமாக ‘சலார்’ கருதப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here