‘சலார்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

0
90

‘Salaar’: ‘சலார்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி பல கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தற்போது ‘சலார்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கேஜிஎப் திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கேஜிஎஃப் படத்துக்கு இசையமைத்து ரசிகர்களைப் பெற்ற ரவி பர்சூர் தான் சலார் படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்துள்ளார். நடிகை சுருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த டிச.22ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சலார்’ திரைப்படம் நாளை (ஜன.20) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: யூடியூப் டிரெண்டிங்கில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ டிரைலர்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here