‘Saloon’: இயக்குநர் எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் நடிகர் சிவா மற்றும் யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘சலூன்’. இந்த படம் ஒரு நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தை இந்தர் குமார் தயாரிக்கிறார். மேலும், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். நடிகர் சிவாவும் யோகிபாபுவும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.
இவர்களது காம்போவில் வெளியாகவுள்ள இந்த ‘சலூன்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் தற்போது ‘சலூன்’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த சலூன் படத்தின் ‘மயிர்’ பாடலின் லிரிக்கல் விடியோ இன்று (பிப்.28) வெளியாகியுள்ளது. இந்த பாடலை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.