சமந்தா நடிக்கும் ‘சிட்டாடல்’ வெப் சீரிஸ்..! அப்டேட் கொடுத்த படக்குழு..!

0
97

Citadel update: தமிழ் சினிமானின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் சமீப காலமாக அவர் படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்தார்.

அதன்பிறகு எந்த புதிய படங்களிலும் நடிக்கவில்லை. மேலும், இவர் மயோசிடிஸ் நோய்க்கான சிகிச்சையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. உடல்நலம் குணமடைந்த பிறகு விரைவில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமந்தா ஹிந்தியில் நடித்துள்ள ‘சிட்டாடல்’ வெப் சீரிஸ் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சீரிஸை ‘தி பேமிலிமேன் 2’ வெப் சீரிஸை இயக்கிய ராஜ், டிகே ஆகியோர் இயக்கியுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் இந்த சீரிஸை பார்த்துள்ளனர். இதனை பார்த்த சமந்தா “படத்தை கடைசியாக, சிலவற்றை நாங்கள் பார்த்தோம், அது எங்களுக்குப் பிடித்திருந்தது” என கூறியுள்ளார்.

நடிகர் ரிச்சர்ட் மேடன் நடிப்பில் ஹாலிவுட்டில் வெளியான ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ ஒரு வெப் சீரிஸின் இந்திய வெர்ஷன்தான் ‘சிட்டாடல்’. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சீரிஸின் படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்த கதைக்கு ஹாலிவிட்டில் பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது அந்த சீரிஸ் இந்தியாவில் எடுக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியாவில் இந்த படத்திற்கு எவ்வாறான வரவேற்புகள் கிடைக்கும் என்பதை எதிர்பார்த்து படக்குழிவினர் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ‘மூன்று ஆண்டுகள் கனவை நனவாக்கிய குழுவிற்கு நன்றி’ – ‘ஸ்டார்’ பட இயக்குநர் இளம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here