சமுத்திரகனியின் ‘ராமம் ராகவம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ..!

0
141

தமிழ், தெலுங்கு திரையுலகில் தற்பொழுது பிசியான நடிகராக வலம்வருபவர் சமுத்திரக்கனி. இவர், தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கி நடிக்கும் ‘ராமம் ராகவம்’ திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்த ‘ராமம் ராகவம்’ திரைப்படத்தை ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும், பிருத்வி போலவரபு தயாரிப்பில் இந்தப் படம் உருவாகுகிறது.

இந்த படத்திற்கு அருண் சிலுவேறு இசையமைக்கிறார். துர்கா பிரசாத் கொல்லி ஒளிப்பதிவு செய்கிறார். ‘ராமம் ராகவம்’ படம் அப்பா மகன் உறவை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத், ராஜமந்திரி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், தற்போது படக்குழு ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ராமம் ராகவம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வருகிற காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படத்தில் சமுத்திரக்கனி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here