‘பிக் பாஸ் சனம் செட்டியின் டீப் பேக் வீடியோ’..! போலீசில் புகார்..!

0
92

Sanam Shetty Deep Fake Video : தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் கதாநாயகியாக வலம் வருபவர் சனம் செட்டி. மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கிய அவர் 2016ஆம் ஆண்டு ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டத்தை வென்றார்.

அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேபோல கடந்த 2020ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று 63ஆவது நாளில் எவிக்ட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ‘மகா’ திரைப்படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் டீப் பேக் வீடியோ குறித்து ஒரு அதிர்ச்சி தகவலை அவர் வெளியிட்டிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு நடிகை ராஸ்மிகா மந்தானாவில் வீடியோ ஒன்று மிகப் பெரிய அளவில் சர்ச்சைய ஏற்படுத்தியது. அதன் பிறகு அந்த Deep Fake வீடியோவை உருவாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஒரு தனி நபர், ட்விட்டர் மூலம் தனது Deep Fake வீடியோவை வெளியாடப்போவதாக மிரட்டுவதாக பதிவிட்டுள்ளார். தமிழக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிருத்விராஜ் நடிக்கும் ‘ஆடு ஜீவிதம்’ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here