சஞ்சய் தத் காங்கிரஸில் இணைந்தது உண்மையா?.. அடுத்தக்கட்ட நகர்வு என்ன?..

0
102

Sanjay Dutt: பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சஞ்சய் தத். கன்னட மொழியில் பான் இந்தியா அளவில் வெளியான ‘கேஜிஎப்’ படத்தின் மூலம் தென்னிந்தியாவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து இருந்தார்.

இந்த நிலையில், சஞ்சய் தத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சஞ்சய் தத் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நான் அரசியலுக்கு வரப்போவதாக வதந்திகள் பரவி வருகின்றன. அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை. நான் ஒருவேளை அரசியலில் இறங்க முடிவு செய்தால், அதனை நானே முதலில் அறிவித்துவிடுவேன்.

தற்போது என்னைப் பற்றி பரப்பப்படும் செய்திகளை யாரும் நம்பாதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here