‘மீண்டும் இணையும் சந்தானம், ஆர்யா காம்போ’ – காமெடி கலாட்டா கன்பார்ம்!

0
81

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இதில், சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. அதில் சந்தானம் பேசிய ராமசாமி வசனம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கார்த்திக், சந்தானம், மேகா ஆகாஷ் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டனர்.

இதில், சிறப்பு விருந்திநராக நடிகர் ஆர்யா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், “இந்த படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நானும், ஆர்யாவும் இணைந்து அடுத்ததாக கதாநாயகர்களாக நடிக்கவுள்ளோம்.

அது ஒரு அட்வென்ச்சர் படம். பாஸ் என்ற பாஸ்கரன் படத்தை மிஞ்சுகிற அளவிற்கு அந்த படம் உருவாகும்” என பேசினார். சந்தானம் போன்று ஆர்யாவும் நாங்கள் சேர்ந்து நடிக்க இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

ஆகையால், ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் யோகி மூன்றாவது முறையாக சந்தானத்தை வைத்து இயக்க இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here