‘Sardar 2’ Movie : ‘சர்தார் 2’ படத்தின் வில்லன் இவரா..! ரசிகர்களுக்கு கன்பார்ம் ட்ரீட்

0
105

‘Sardar 2’ Movie : இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் தமிழ் திரைப்படத்தின் முக்கிய நடிகர் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இரும்புத்திரை’.

அதை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய திரைப்படம் ‘ஹீரோ’. அதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியை வைத்து ‘சர்தார்’ திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி ஏஜென்ட் சர்தார் சந்திரபோஸ் என்கின்ற உழவு அதிகாரியாகவும், இன்ஸ்பெக்டர் விஜய பிரகாஷ் என்கின்ற கதாபாத்திரத்தில், சர்தார் சந்திரபோஸின் மகனாகவும் இருவேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. பி.எஸ் மித்ரன் அதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘சர்தார்’ படத்தின் முதல் பாகத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வரும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு “நடிப்பு அரக்கன்” என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ‘சர்தார் 2’ படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘சர்தார்’ முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வரும் செய்தியை அறிந்த ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here